மயிலாடுதுறையில் இந்திய மருத்துவ சங்கத்தினர் பணிகளை புறக்கணித்து போராட்டம்
மருத்துவர் அர்ச்சனாசர்மா மீது தவறான வழக்குபதிவுசெய்த காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி போராட்டம்;
மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவர் அர்ச்சனா சர்மா மீது தவறான வழக்குபதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்ககைகளை வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கத்தினர் மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவ பணிகளை புறக்கணித்து போராட்டம்:-
ராஜஸ்தான் மாநிலத்தில் மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவர் அர்ச்சனா சர்மா மீது தவறான வழக்குபதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட மருத்துவர் அர்ச்சனா சர்மாவின் குடும்பத்திற்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும்,மருத்துவர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மருத';துவ சங்கத்தினர் இன்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், திருவெண்காடு, செம்பனார்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து புறநோயாளிகள் பிரிவு மற்றும் வழக்கமான மருத்துவ பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய மருத்துவ சங்க மயிலாடுதுறை கிளைத்தலைவர் மருத்துவர் பாரதிதாசன், செயலாளர் மருத்துவர் சௌமித்யா பானு, பொருளாளர் மருத்துவர் அருண்குமார் மற்றும் இந்திய மருத்துவ சங்க மயிலாடுதுறை கிளை நிர்வாகிகள் ஏராளமான மருத்துவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.