குத்தாலம் அருகே ஶ்ரீ மகா காளியம்மன் கோயில் தீ மிதி திருவிழா

குத்தாலம் அருகே ஶ்ரீ மகா காளியம்மன் கோயில் தீ மிதி திருவிழா மிக விமரிசையாக நடந்தது.;

Update: 2022-04-26 15:07 GMT

குத்தாலம் அருகே ஸ்ரீமகா காளியம்மன் கோவில் தீ மிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே நக்கம்பாடி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ தில்லை மகா காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 11ஆம் தேதி திருவிழா தொடங்கப்பட்டு அதனைத் தொடர்ந்து 15நாட்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று தீமிதி திருவிழாவானது அலகு காவடி, சக்தி கரகம் ஆகியவை ஊர்வலமாக புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியே வீதிஉலாவாக கோயிலை வந்தடைந்தன.

கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபாடு செய்தனர். கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி பொதுமக்களை உற்சாகப்படுத்தியது.

Tags:    

Similar News