தரங்கம்பாடி அருகே கொக்குகளை வலைவிரித்து பிடித்த இருவர் கைது

தரங்கம்பாடி அருகே வெள்ளைத்திடல் கிராமத்தில் கொக்குகளை வலை விரித்து பிடித்த 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்,;

Update: 2021-10-17 05:39 GMT

தரங்கம்பாடி அருகே கொக்குகளை வலைவிரித்து பிடித்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வனசரகத்திற்கு உட்பட்ட தரங்கம்பாடி அருகே வெள்ளைத்திடல் கிராமத்தில் சிலர் வலை வைத்து கொக்குகளை வேட்டையாடுவதாக வனத்துறைக்கு புகார் வந்தது. இதனையடுத்து சீர்காழி வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியல் தலைமயிலான வனகாவலர்கள் தரங்கம்பாடி ஆற்றுப்படுகை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வெள்ளைத்திடல் கிராமத்தில் வயல் பகுதியில் அதே கிராமத்தை சேர்ந்த சத்தியசெல்வன் மற்றும் பாலச்சந்திரன் ஆகிய இருவரும் வலை விரித்து கொக்குகளை பிடித்து கொண்டிருந்தனர். இதனையடுத்து அவர்களை வனத்துறையினர் கைது செய்து இருவருக்கும் தலா ரூபாய் 15,000 அபதாரம் விதித்தனர். மேலும் சீர்காழி வனத்துறையில் சத்யசெல்வன், பாலச்சந்திரன் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News