தரங்கம்பாடி அருகே மருத்தூரில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே மருத்தூரில் சிறப்பு கால்நடை விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2021-12-23 10:58 GMT

தரங்கம்பாடி அருகே மருத்தூரில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறையுடன் இணைந்து ரிலையன்ஸ் பவுன்டேஷன் நடத்திய சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே மருத்தூர் ஊராட்சியில் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 426 பசு மற்றும் எருமை மாடுகள் உள்ளன. இவற்றுக்கான தடுப்பூசிகள் படிப்படியாக வரவழைக்கப்பட்டு, அனைத்து மாடுகளுக்கும் முழுமையாக தடுப்பூசிகளை செலுத்த கால்நடைத்துறை கவனம் செலுத்தி வருகிறது. அவ்வகையில் மருத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு முகாமில், அந்த ஊராட்சியில் உள்ள 360 மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாமை கால்நடைத்துறை உதவி இயக்குநர் முத்துக்குமாரசாமி துவக்கிவைத்து, கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து மாவு மற்றும் கன்றுகளை நன்றாக வளர்த்துள்ள கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

முகாமில், குடற்புழு நீக்கம், தொண்டை அடைப்புக்கான தடுப்பூசி, செயற்கை முறை கருவூட்டல் மற்றும் பிற நோய்களுக்கும் சிகிச்சையளிக்கப்பட்டது. மேலும் அனைத்து மாடுகளுக்கும் தாது உப்புக் கலவைகளை மருத்துவக்குழுவினர் வழங்கினர். இதில், கால்நடை மருத்துவர்கள் அன்பரசன், சுதா மற்றும் ரிலையன்ஸ் பவுன்டேஷன் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் கிராம மக்கள் ஏராளமானோர் தங்கள் கால்நடைகளுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Tags:    

Similar News