சீர்காழி காவல் நிலைய வளாகத்தில் மூலிகை செடிகளை பராமரிக்கும் ஆய்வாளர்

சீர்காழி காவல் நிலைய வளாகத்தில் புதர்களை அகற்றி மூலிகை செடிகளை பராமரிக்கும் ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Update: 2021-12-26 05:41 GMT

மூலிகை செடிகளுக்கு தண்ணீர் விடும் ஆய்வாளர் மணிமாறன்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலைய ஆய்வாளராக மணிமாறன் பணியாற்றி வருகிறார். இவர் பணியில் சேர்ந்த நாள் முதல் காவல் நிலையத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்.தற்போது காவல் நிலையத்தை சுற்றியுள்ள வளாகங்கள் மற்றும் காவலர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள வளாகங்களில் உள்ள புதர்களை அகற்றி பூச்செடிகள் மற்றும் மூலிகை செடிகளை வளர்க்கும் பணியை துவக்கி செய்து வருகிறார்.

காவல் ஆய்வாளரின் இந்த சிறப்பான செயலை தொடர்ந்து சீர்காழி காவல் நிலைய காவலர்களும் ஆர்வமுடன் செடிகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் காவல் நிலையம் நுழைவுவாயில் முதல் அனைத்து வளாகங்களும் பசுமையான சோலைவனமாக மாறி வருகிறது.தொடர் பணிகளுக்கு இடையே காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களின் இயற்கையைப் பராமரிக்கும் இந்த செயல் சீர்காழி நகர மக்களிடையே பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது

Tags:    

Similar News