சீர்காழி அருகே பாதரக்குடி கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா

சீர்காழி அருகே பாதரக்குடி கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.;

Update: 2022-01-09 05:07 GMT
சீர்காழி அருகே சிலம்பாட்ட கழகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பாதரக்குடி கிராமத்தில் அமைந்துள்ள மாவீரன் சிலம்பாட்ட கழகத்தில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். சிலம்பம்,மான் கொம்பு,வாள்வீச்சு அலங்காரச் சிலம்பம், பொய்க்கால் குதிரை சிலம்பம், இரட்டை கம்பு சுற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை சிலம்பாட்ட வாத்தியார் தினேஷ்குமார் என்பவர் பயிற்றுவித்து வருகிறார்.இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிலம்பாட்ட மாணவ,மாணவிகள்,பெற்றோர் மற்றும் கிராமமக்கள் இணைந்து சமத்துவ பொங்கல் விழாவை இன்று கொண்டாடினர்.

பாதரக்குடி முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் வாழை மரங்கள்,தோரணங்கள் கரும்புகள் வைத்தும் சர்க்கரை பொங்கல்,வெண்பொங்கல் செய்து அனைவரும் இணைந்து படையலிட்டு வழிபாடு செய்தனர்.அதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கான சிலம்பம்,வாள்வீச்சு, மான்கொம்பு சுற்றுதல், இரட்டை கம்பு சுற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தற்காப்புகலை போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டியில் வெற்றி பெற்ற சிலம்பாட்ட மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமேக், பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் சத்தியமூர்த்தி, ச.மு.இ. மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி,சரஸ்வதி கல்வி குழுமத் தாளாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

Tags:    

Similar News