மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் போக்சோவில் கைது

மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;

Update: 2021-12-19 10:09 GMT

கைது செய்யப்பட்ட கவியரசன்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தாலுகா குச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கவியரசன் (22) இவர் மயிலாடுதுறை மணல்மேடு காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலை பார்த்து வருகிறார்.

இவர் அதே பகுதியில் உள்ள ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்து மஞ்சள் கயிறு கட்டி திருமணம் செய்துள்ளதாக சிறுமியை வளர்க்கும் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்தனர். 

புகாரின் பேரில் போலீசார் போக்சோ மற்றும் குழந்தைகள் திருமண தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிந்து கவியரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News