மூத்த முன்னோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த ரூ. 1 லட்சம் வழங்கல்
திராவிட முன்னேற்றக் கழகம் துவங்கிய 1950 ஆம் ஆண்டு முதல் கட்சியில் கிளைச் செயலாளராக பணியாற்றி வந்தார்.;
1950 துவங்கிய நாள் முதல் திராவிட முன்னேற்றக் கழக கட்சியில் உள்ள மூத்த முன்னோடிக்கு கழகத்தின் சார்பில் ரூபாய் 1 லட்சம் முதல்வரின் ஆணைக்கிணங்க எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, கீழையூர் ஊராட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் துவங்கிய 1950 ஆம் ஆண்டு முதல் கட்சியில் கிளைச் செயலாளராக பணியாற்றி, பயணித்து வரும் கு.ராமையன் (94) மனைவி அம்பிகை (80) இவர் 1953 கல்லக்குடி போராட்டத்தில் கலைஞருடன் கைது செய்யப்பட்டவர்.
இவருக்கு கடந்த ஒரு வருட காலமாக உடல்நிலை சரியில்லாமல், குடும்பம் நலிவுற்றது. இந்தநிலையில், ராமையன் தலைமை நிலையத்துக்கும், மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் உதவித்தொகை வேண்டி மனு அளித்திருந்தார். இத்தகவலை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு க ஸ்டாலினுக்கு தகவல் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில், தமிழ்நாடு முதல்வரின் ஆணைக்கிணங்க ரூபாய் 1 லட்சம் காசோலையை கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் அவரது இல்லத்துக்கு நேரில் சென்று வழங்கினார்.
நிகழ்வில், நாகை வடக்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் ஞானவேலன் பொருளாளர் ஜி என் ரவி, அன்பழகன் தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கழக மூத்த முன்னோடிகள் பொறுப் பாளர்கள் பலர் உடன் இருந்தனர்.