மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் வரி கட்டாத தங்க நகைகள் பறிமுதல்.

வரி கட்டாமல்கொண்டு வரப்பட்ட தங்க நகைகள் மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது

Update: 2021-09-08 08:42 GMT

வரி கட்டப்படாததால் மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்


சென்னையிலிருந்து திருச்சி செல்லக்கூடிய சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மயிலாடுதுறை ரயில்வே நிலையத்திற்கு வந்தபோது ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் உதயச்சந்திரன் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் வைத்திருந்த பையை சோதனையிட்டதில் 1,600 கிராம் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. இதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில் நகைகளை பறிமுதல் செய்து ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். விசாரனையில் சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த நகை வியாபாரி ரமேஷ்குமார் என்பவருக்குச் சொந்தமான நகை என்பதுவும் மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை பகுதியில் கொடுக்க வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சென்னையிலிருந்து ரமேஷ்குமாரை வரவழைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் 300கிராம் தங்க நகைக்கு மட்டுமே ஆவணம் உள்ளது. மீதமுளள்ள நகைகளுக்கு ஆவணங்கள் இல்லாததால் திருச்சி வணிகவரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாநில வரி அலுவலர் ராஜசேகர் தலைமையிலான வணிக வரித்துறையினர் நேரில் வந்து ரமேஷிடம் தீவிர விசாரணை நடத்தினர். நகைகளுக்கு உரிய ஆவணம் இல்லாததால் வணிக வரித்துறையினர் வரி மற்றும் தண்டம் விதிக்கப்பட்ட ரூ. 3 லட்சத்து 66 ஆயிரம் பணம் இணையதளத்தில் வழியாக வசூலிக்கப்பட்டு தங்க நகைகளை உரிமையாளர் ரமேஷ்குமாரிடம் ஒப்படைத்தனர். 

Tags:    

Similar News