வீட்டு வளர்ப்பு நாய்க்கு சீமந்தம்- சீர்காழியில் கொண்டாட்டம்

சீர்காழியில் வீட்டு வளர்ப்பு நாய்க்கு சீமந்தம் விழா நடத்தி கொண்டாடப்பட்டது.;

Update: 2022-04-11 06:47 GMT

சீர்காழியில் ஒரு வீட்டில் வளர்ப்பு நாய்க்கு சீமந்த விழா நடத்தப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மதீனா நகரை சேர்ந்த தம்பதியரின் மகன்களான நிதீஷ் குமார் மற்றும் சிவராஜ் ஆகியோர் தங்களது உறவினர் வீட்டிலிருந்து நாய்க்குட்டி ஒன்றை தூக்கிவந்து அவர்கள் வீட்டில் வளர்த்து பராமரித்து வந்தனர்.சிறுவர்கள் சுக்கி என பெயரிட்டு வளர்த்து வந்த நாய்க்குட்டி குடும்பத்தில் ஒரு அங்கத்தினராக மாறியது.வீட்டில் அனைவரிடமும் பாசமுடன் பழகிய நாய்க்குட்டி  தற்போது கருவுற்று இருந்தது.

அதனை அறிந்த வீட்டிலிருந்த அனைவரும் நாய்க்குட்டிக்கு சீமந்தம் செய்ய முடிவு செய்தனர்.அதன்படி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களை தங்கள் வீட்டிற்கு அழைத்து நாய்க்கு சீமந்தம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு நாய்க்கு சந்தனம்,மஞ்சள்,குங்குமம் இட்டு சீமந்தம் செய்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

Tags:    

Similar News