மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக மின்சாரம் துண்டிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.;

Update: 2022-04-22 15:08 GMT

மயிலாடுதுறையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் விளக்கு வெளிச்சத்தில் படித்த மாணவிகள்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று இரவு அறிவிக்கப்படாமல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பொதுமக்கள் அவதி அடைந்தனர். இந்நிலையில் இன்று காலை முதல் பல்வேறு கிராமங்களில் அடிக்கடி மின் நிறுத்தம் செய்யப்பட்டது. நல்லதுகுடி, மாப்படுகை, சேத்தூர் உள்ளிட்ட பல கிராமங்களில் ஐந்து முறைக்கு மேல் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது. கோடைக் காலம் என்பதால் மின் நிறுத்தத்தின் காரணமாக ஏசி அல்லது மின் விசிறி இயங்காத காரணத்தால் பொதுமக்கள் புழுக்கம் தாங்காமல் தங்கள் வீடுகளில் வெளியில் வந்து அமர்ந்து இருந்ததை காண முடிந்தது. பள்ளி மாணவ மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் அவதி அடைந்தனர்.

மத்திய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட மின்னழுத்த வேறுபாட்டின் காரணமாகவே இந்த மின் தடை ஏற்பட்டதாகவும் உடனடியாக சரி செய்யப்பட்டதாகவும் கூறப்பட்ட நிலையில் இரண்டாவது நாளான இன்றும் மின் நிறுத்தத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இதனிடையே மின்சார அதிகாரி ஒருவரிடம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறித்து காரணம் கேட்டு ஒருவர் வாக்குவாதம் செய்யும் ஆடியோ வாட்ஸ் அப்பில் பரவி வைரலாகியுள்ளது. அதில் மின்சாரப் பற்றாக்குறையால் மின்சாரம் துண்டிக்க அறிவுறுத்தப் படுவதாக விளக்கமளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News