கொரோனா விதிகளை பின்பற்றாத தியேட்டர்களுக்கு சீல்

Update: 2021-04-16 11:30 GMT

மயிலாடுதுறையில் கொரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகளை பின்பற்றாத 2 சினிமா தியேட்டர்களுக்கு நகராட்சி அலுவலர்கள் தலா ரூ.5000 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வருவாய்த்துறை, நகராட்சி, காவல்துறை என அனைத்துத் துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் சுப்பையா உத்தரவின் பேரில் நகராட்சி அலுவலர்கள் தினசரி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தியும், எச்சரித்தும், மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தும், சமூக இடைவெளியை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அவ்வகையில் 2 சினிமா தியேட்டர்களில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பிச்சைமுத்து, ராமையன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவில்லை என 2 தியேட்டர்களுக்கும் தலா ரூ.5000 அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டு எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News