செம்பனார் கோவிலில் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவிலில் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.;

Update: 2021-11-01 08:28 GMT

செம்பனார் கோவில் பள்ளியில் மாணவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் நிவதோ எம். முருகன் இனிப்பு கொடுத்து வரவேற்றார்.

தமிழகத்தில் 19 மாதங்களுக்குப் பிறகு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதிக எண்ணிக்கையில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வருவார்கள் என்பதால் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வருகை தர உள்ளதால் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களை வரவேற்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவ்வகையில் மயிலாடுதுறையில் உள்ள பள்ளிகளில் அந்த பகுதியின் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாணவர்களுக்கு வரவேற்பு அளித்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் நூற்றாண்டைக் கடந்த செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் உதவி நடுநிலைப்பள்ளி நடைபெற்ற நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன், ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பள்ளி பாடப்புத்தகங்கள், இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

இந்நிகழ்வில் நாகை வடக்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் ஞானவேலன், செம்பை வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம். அன்பழகன், வட்டார கல்வி அலுவலர் சீனிவாசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ஸ்ரீதர், மாவட்ட மற்றும் ஆசிரியர்கள், கழக பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News