வேட்பாளர்களுக்கு நடத்தை விதி முறைகள் விளக்கக் கூட்டம்
மயிலாடுதுறை, சீர்காழி மற்றும் பூம்புகார் தொகுதி வேட்பாளர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி மற்றும் பூம்புகார் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கியுள்ளன. இத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் வேட்பாளர்களுக்கான நடத்தை விதிமுறைகள் குறித்த கூட்டம் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் இன்று நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மூன்று சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் செலவின பார்வையாளர்கள், தேர்தல் பொது பார்வையாளர்கள், தேர்தல் போலீஸ் பார்வையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு, வேட்பாளர்களின் நடத்தை விதிமுறைகள் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். மேலும் நடத்தை விதிமுறைகள் குறித்து காணொலி மூலம் வேட்பாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் மூன்று தொகுதிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் கலந்து கொண்டனர்.