தரங்கம்பாடி பேரூராட்சியில் ரூ.1 கோடி 50 இலட்சத்தில் மின் தகன மேடை
தரங்கம்பாடி பேரூராட்சியில் ரூ.1 கோடி 50 இலட்சத்தில் மின் தகன மேடை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.;
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தேர்வுநிலை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைமூலதன மான்ய நிதி திட்டம் 2021-2022சந்தைவெளித்தெரு சுடுகாடு அமைந்துள்ள இடத்தில் ரூ.1கோடி 50 லட்சம் மதிப்பீட்டில்மின்தகன மேடை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான நிவேதா எம். முருகன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியின்போது தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி செம்பை, ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.அப்துல் மாலிக், பேரூராட்சி துணைத் தலைவர் பொன் ராஜேந்திரன் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சியின் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.