மயிலாடுதுறை அருகே 10 நாட்களாக மின்சாரம் , குடிநீர் இல்லாததால் சாலை மறியல்
பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், மயிலாடுதுறை- சிதம்பரம் காலிகுடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்;
மயிலாடுதுறை அருகே உளுத்துக்குப்பை கிராமத்தில் 10 நாட்களாக மின்சாரம் , குடிநீர் இல்லாததால் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மயிலாடுதுறையை அடுத்த உளுத்துக்குப்பை கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக அப்பகுதியில் உள்ள ட்ரான்ஸ்பார்மர் பழுது காரணமாக குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மின்சார வசதி, குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால்,
மயிலாடுதுறை- சிதம்பரம் சாலையில் காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து இரண்டு மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கும், அலுவக வேலைக்கு செல்வோருக்கு சிரமம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த மயிலாடுதுறை காவல்துறையினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.