மயிலாடுதுறை அருகே குளத்தில் மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த கோரிக்கை

மயிலாடுதுறை அருகே குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-01-23 04:39 GMT

மயிலாடுதுறை அருகே குளத்தில் செத்து மிதந்த மீன்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கோழிகுத்தி கிராமத்தில் பெரியகுளம் அமைந்துள்ளது. இப்பகுதியில் வசிக்கக்கூடியர்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் பொதுகுளமாக பெரியகுளம் அமைந்துள்ள நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஊர் நாட்டாமை பஞ்சாயத்தார்கள் முன்னிலையில் தனி நபர் ஒருவருக்கு இந்த குளமானது குத்தகைக்கு விடப்படு மீன் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குளத்தின் மீன்கள் ஆங்காங்கே செத்து மிதக்க தொடங்கியுள்ளன. இன்று ஏராளமான மீன்கள் செத்து தண்ணீரின் மேற்பரப்பில் மிதந்ததால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசக் தொடங்கியுள்ளது.

குளத்தில் மீன்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா இல்லை தண்ணீரின் தன்மை மாறுபட்டதன் காரணமாக மீன்கள் நோய் வாய்ப்பட்டு இறந்திருக்கலாம் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். ஊர் பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து குத்தகைதாரரான இளங்கோ என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு துர்நாற்றம் வீசிய நிலையில் குளத்தில் செத்து கிடக்கும் மீன்களை உடனடியாக அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News