மயிலாடுதுறையில் குடியரசு தினவிழா: போலீசார் அணிவகுப்பு ஒத்திகை

குடியரசு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில், காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.;

Update: 2022-01-25 13:00 GMT

மயிலாடுதுறையில், அணி வகுப்பு ஒத்திகையில் ஈடுபட்ட போலீசார். 

நாடு முழுவதும் 73 வது குடியரசுதினம், நாளை  கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினத்தன்று மயிலாடுதுறை சாய் விளையாட்டு அரங்கில்,  மாவட்ட ஆட்சியர் லலிதா தேசியக்கொடியை ஏற்ற உள்ளார். அப்போது காவல்துறை சார்பில் போலீசார் அணிவகுப்பு மரியாதை நடைபெறும்.

இதனை முன்னிட்டு,  போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்வு,  கடந்த 4 நாட்களாக சாய் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வந்தது. இறுதி அணிவகுப்பு ஒத்திகையானது,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இந்த ஒத்திகை பயிற்சியில் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர். ட்ரம்ஸ் வாத்தியங்கள் முழங்க போலீசார் அணிவகுப்பு ஒத்திகையை நடத்தினர்.

Tags:    

Similar News