மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 31-வது நினைவு தினம் அனுசரிப்பு
யிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ்காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்;
மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் 31-வது நினைவு தினம் அனுசரிப்பு; மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
நாடு முழுவதும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கபட்டு வருகிறது. அவ்வகையில் மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள மத்திய அரசின் ராஜீவ் காந்தி விளையாட்டு அரங்கத்தில், உள்ள ராஜீவ் காந்தியின் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.மயிலாடுதுறை மாவட்ட தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.தொடர்ந்து ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.