மயிலாடுதுறையில் தனியார் அறக்கட்டளை சார்பில் நரிக்குறவர்களுக்கு நிவாரண உதவி

தனியார் அறக்கட்டளை சார்பில் 100 நரிக்குறவர்கள் குடும்பத்திருக்கு கொரோனா நிவாரண உதவிகளை மயிலாடுதுறை எம்எல்ஏ வழங்கினார்.

Update: 2021-06-07 10:15 GMT

மயிலாடுதுறைதனியார் அறக்கட்டளை சார்பில் 100 நரிக்குறவர்கள் குடும்பத்திருக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினர்.

மயிலாடுதுறை பல்லவராயன்பேட்டை நரிக்குறவர் காலனியில் சுமார் 100 நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாசிமணி, ஊசி ஆகிய பொருட்களை விற்பனை செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பொதுமுடக்கம் காரணமாக பேருந்து மற்றும் ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் கடந்த ஒரு மாதமாக நரிக்குறவர்கள் வாழ்வாதாரம் இழந்து தங்கள் காலனிக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இவர்கள் அனைவரின் குடும்பத்துக்கும், தனியார் (ரிலையன்ஸ்) அறக்கட்டளை சார்பில் ஒருவாரத்துக்குத் தேவையான அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறி ஆகியன நிவாரணமாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார், முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு நிவாரணப் பொருள்களை நரிக்குறவ சமுதாய மக்களிடம் வழங்கினர். இதற்கு நன்றி பாராட்டும் விதமாக நரிக்குறவ மக்கள் தாங்கள் தயாரித்து வைத்திருந்த கிறிஸ்டல் மணியினை அணிவித்து மகிழ்ந்தனர். இதில், அறக்கட்டளையின் மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பாளர் மெய்கண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News