மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் தணிந்த வெப்பம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்தது.
வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்தது. மயிலாடுதுறை, மணல்மேடு, குத்தாலம், மங்கைநல்லூர், உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சில நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்வதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.