பொறையாறு அருகே மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்.எல்.ஏ. நிவாரண உதவி
பொறையாறு அருகே மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்.எல்.ஏ.நிவேதா எம். முருகன் நிவாரண உதவிகளை வழங்கினார்.;
மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே இராஜாம்பாள் தெருவில் வசிக்கும் ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை எம்.எல்.ஏ. நிவேதா முருகன் இன்று வழங்கினார்.
தி மு க.இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பலத்த மழையால் பாதிக்கப்பட்ட இராஜாம்பாள் தெருவில் வசிக்கும் ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் இந்த நிகழ்ச்சியின்போது வழங்கப்பட்டது.
அவருடன் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், ஒன்றிய குழ துணைத்தலைவர் பாஸ்கர், நகர செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.