மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து இதமான சூழல் நிலவுகிறது.;

Update: 2022-04-11 05:15 GMT

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக நான்கு நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்றில் இருந்து பரவலாக மழை விட்டுவிட்டு பெய்தது. மேலும் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை குத்தாலம், தரங்கம்பாடி, செம்பனார்கோவில், மணல்மேடு, மங்கைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தற்போது உளுந்து பயிர் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது பெய்து வரும் இந்த மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றும் இன்றும் பரவலாக மழை பெய்து வருவதால் தற்போது அறுவடைப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே சம்பா அறுவடை நேரத்தில் பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீண்டும் பயிறு உளுந்து அறுவடை நேரத்திலும் இந்த மழையால் பாதிப்படைவது விவசாயிகள் இடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News