மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் காலை முதல் பரவலாக மழை

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.;

Update: 2021-12-30 07:00 GMT

மயிலாடுதுறை மாவட்டத்தில்,  கடந்த 10 தினங்களுக்கு மேலாக கடும் பனிப்பொழிவு இருந்தது. இன்று காலை முதல்,  ஒரு மணி நேரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை குத்தாலம், மணல்மேடு, செம்பனார்கோவில், மங்கைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 7 மணி முதல் மழை பெய்து வருகிறது.

இரவு மற்றும் காலை நேரங்களில் கடும் பனிப்பொழிவு இருந்த நிலையில் தற்போது திடீரென மழை பெய்து வருகிறது. சம்பா பயிர்கள் இன்னும் 15 நாட்களில் அறுவடை செய்ய தயாராக உள்ள நிலையில், தற்போது பயிர்களில் காணப்படும் புகையான் தாக்குதல்,  இந்த மழையால் மேலும் அதிகரிக்கும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News