மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயில்வே போர்டு பயணிகள் வசதிகள் குழு ஆய்வு
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயில்வே போர்டு பயணிகள் வசதிகள் குழு உறுப்பினர்கள் ஆய்வு நடத்தினர்.
இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிகள் மேம்பாடு குறித்து ஆய்வு செய்வதற்காக ரயில்வே போர்டு மெம்பர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் இந்தியா முழுவதும் பல்வேறு ரயில் நிலையங்களில் ஆய்வு செய்து வருகின்றனர் இந்நிலையில், இன்று மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் ரயில்வே போர்டு பயணிகள் வசதிகள் குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன் மஞ்சுநாதா, உமாராணி, அபிஜித் தாஸ் ஆகியோர் அடங்கிய நான்கு பேர் கொண்ட குழு இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
ரயில் நிலையத்தில் ரயில் மேடைகள் குடிநீர் வசதி கழிவறை வசதி மின் விசிறிகள் உள்ளிட்ட ரயில்வே பயணிகளுக்கான, வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர். அவர்களிடம் மயிலாடுதுறை பயணிகள் பாதுகாப்பு சங்கம், மயிலாடுதுறை சேம்பர் ஆப் காமர்ஸ், உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் சார்பில் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் தினமும் வந்து செல்வதால் ஏ.சி. பயணிகள் காத்திருப்பு கூடம், மற்றும் பேட்டரி கார் வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது அவர்களிடம் ரயில்வே பயணிகள் வசதி குழு உறுப்பினர்கள் உறுதியளித்தனர்.
தொடர்ந்து வைத்தீஸ்வரன் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்கின்றனர். தற்போது 70 சதவீத ரயில்கள் சென்று வரும் நிலையில் இரண்டு மாத காலத்தில் முழுமையாக ரயில்கள் இயக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தனர்.