மயிலாடுதுறையில் ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை ரயில் நிலையம் முன் ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
மயிலாடுதுறை ரயில்வே நிலையம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் பயணிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் பயணிகள் சங்க தலைவர் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கொரோனாவை காரணம் காட்டி நிறுத்தப்பட்ட அனைத்து பாசஞ்சர் ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும், பாசஞ்ர் ரயில்களை எக்ஸ்பிரஸ் என்று பெயர் மாற்றி கூடுதல் கட்டணம் வசூல்செய்வதை கைவிட வேண்டும், அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் முன்பதிவில்லா பெட்டிகளை இணைக்க வேண்டும், தஞ்சாவூர்-விழுப்புரம் இரட்டைப்பாதை பணிகள் விரைந்து தொடங்க வேண்டும், மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகையை உடனடியாக அமல்படுத்த வேண்டும், மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் எஸ்கலேட்டர் வசதி செய்து தர வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.