மயிலாடுதுறை மாவட்டத்தில் கோவில்களின் அர்ச்சகர்களுக்கு புத்தாடை
மயிலாடுதுறை மாவட்டத்தில் கோவில்களின் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகளை சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கினார்கள்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள், பூசாரிகள், பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் சீருடைகள் வழங்கும் விழா மயிலாடுதுறை பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் நடைபெற்றது.
இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன் பன்னீர்செல்வம், ராஜகுமார் கலந்துகொண்டு அர்ச்சகர்கள் பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள் மற்றும் பூசாரிகள், பணியாளர்களுக்கு புத்தாடைகள் சீருடைகளை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். 50 பேருக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகளை வழங்கினர்.
இதன்மூலம் மாவட்டத்தில் இந்து சமய அறநிலைத்துறை கோவிலில் பணியாற்றும் 1472 நபர்கள் பயன்பெறுவர் இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.