குத்தாலம் அருகே நக்கம்பாடியில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

குத்தாலம் அருகே நக்கம்பாடியில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.;

Update: 2022-05-23 15:21 GMT

குத்தாலம் அருகே நக்கம்பாடியில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

குத்தாலம் அருகே நக்கம்பாடியில் தி.மு.க. குத்தாலம் ஒன்றியத்தின் சார்பாக ஓயாத உழைப்பின் ஓர் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் செய்திருந்தார். பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் குற்றாலம் மேற்கு ஒன்றிய செயலாளர் முருகப்பா மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் மங்கை உமா மகேஸ்வரி சங்கர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு பேச்சாளர்களாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நல மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், கழகக் கொள்கை பரப்பு துணை செயலாளர் வி.சி.சந்திரகுமார், தலைமை கழக பேச்சாளர் ஆத்தூர் சபரி,  மயிலாடுதுறை பாராளுமன்ற  உறுப்பினர் ராமலிங்கம், தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம் கல்யாணம், தி.மு.க .கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டு ஓராண்டு தி.மு.க. ஆட்சியில்  சாதனைகளை விளக்கி பேசினர். 

இக்கூட்டத்தில் மாநில விவசாய அணி இணை செயலாளர் ஆர்.அருள்செல்வன், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், மாவட்ட பொருளாளர் ஜி.என்.ரவி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம். எம். சித்திக், மாவட்ட துணை செயலாளர் கண்ணகி பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.அன்பழகன், எம்.அப்துல் மாலிக், இளையபெருமாள், சசிகுமார், ரவிகுமார், மலர்விழி, திருமாவளவன், ஞான இமயநாதன் உள்ளிட்ட திரளான கழக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இறுதியில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு வீட்டு உபயோக பொருட்கள் மரக்கன்றுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News