பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம் முருகன் வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரிப்பு..
Nivetha Murugan-மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சி 6, 11 வார்டுகளில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம் முருகன் வாக்கு சேகரித்தார்..;
Nivetha Murugan
Nivetha Murugan-தரங்கம்பாடி பேரூராட்சியில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம் முருகன் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
வருகின்ற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட 6, 11 ஆகிய வார்டுகளில் உள்ள சமையன்தெரு, கேசவன்பாளையம், ஆர்.எம்.பாளையம், வெளிப்பாளையம் கடைதெரு ஆகிய பகுதிகளில், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்குகள் கேட்டு வீடு வீடாக சென்று பிரசாரம் மேற்கொண்டார். இதில் நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர்கள் எம்.அப்துல்மாலிக், பி.எம்.அன்பழகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர் மற்றும் வார்டு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2