புதிய பேருந்து நிலையத்தை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் திறப்பு

பரசலூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை சார்பில் ரூ 7 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் திறந்து வைத்தார்;

Update: 2022-04-23 07:15 GMT

புதிய பேருந்து நிலையத்தை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன் திறந்து வைத்தார்.

புதிய பேருந்து நிலையத்தை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் பரசலூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ரூ 7 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது செம்பனார்கோவில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம். முருகன் கலந்து கொண்டு பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர் பிஎம் அன்பழகன் ,அப்துல்மாலிக் ,தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பிஎம்.ஸ்ரீதர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News