மயிலாடுதுறை பாண்டிச்சேரி எல்லைப்பகுதியில் பறக்கும் படையினர் வாகன தணிக்கை

மயிலாடுதுறை பாண்டிச்சேரி எல்லைப்பகுதியில் பறக்கும் படையினர் வாகன தணிக்கை செய்து வருகிறார்கள்.;

Update: 2022-02-05 18:08 GMT

மயிலாடுதுறை மாவட்டம் பாண்டிச்சேரி எல்லைப்பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

வருகின்ற 19-ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் தேர்தல் நடக்க இருப்பதால், வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம், மதுபானங்கள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி வாக்கு சேகரிப்பதினை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு பாண்டிச்சேரி எல்லையான நண்டலாறு சோதனைச்சாவடியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சீனிவாசன், முதல் நிலை காவலர் முத்துகுமாரசாமி ஆகியோர் தலைமையில் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

அதேபோல் தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட முக்கிய பிரதான சாலைகளில் தரங்கம்பாடி தாலுக்கா வட்ட வழங்கல் அலுவலர் பாபு தலைமையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News