மயிலாடுதுறை 1வது வார்டில் அதிகாரியால் வாக்குப்பதிவு தாமதம்
மயிலாடுதுறை 1வது வார்டு திருவிழந்தூர் மையத்தில், தேர்தல் அதிகாரியால் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.;
மயிலாடுதுறை 1வது வார்டு திருவிழந்தூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் உள்ள பூத்தில் தேர்தல் அதிகாரி ஒருவர். வெளியே சென்றதால் வாக்குப்பதிவு தாமதமானது.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சி உள்ள 36 வார்டுகளிலும், காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் தங்கள் ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை 1வது வார்டு நகராட்சி உயர்நிலை பள்ளியில் 5 பூத் உள்ளது.
இதில் ஒரு பூத்தில் தேர்தல் அதிகாரி ஒருவர், தேர்தல் துவங்கும் நேரத்தில் வெளியே சென்றதால் வாக்குப்பதிவு தொடங்க சிறுது நேரம் காலதாமதமானது. பின்னர் வெளியே சென்ற அவரை காவல்துறையினர் தேடி கொண்டு வந்து வாக்குப்பதிவை தொடங்கினர். இதனால் 01w வாக்கு சாவடியில் வாக்குப்பதிவு 10 நிமிடம் தாமதத்திற்குபின் துவங்கியது. இதனால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.