போலியோ சொட்டு மருந்து முகாமை நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தொடங்கினார்

போலியோ சொட்டு மருந்து முகாமை நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தொடங்கினார்;

Update: 2022-02-27 08:33 GMT

நிவேதா முருகன் எம்.எல்.ஏ.  போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார்.

இன்று நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 582 முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட 75,964 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. செம்பனார்கோவில் வட்டாரத்தில் சுமார் 17 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

முதற்கட்டமாக தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் நிவேதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் கார்த்திக் சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற முகாமில் பூம்புகார் சட்டமன்ற சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க.  பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் செம்பனார்கோவில் ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், பள்ளி முதல்வர் சுகுண சங்கரி, மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News