தேர்தல் பணியாற்ற முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அழைப்பு வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முன்னாள் ராணுவத்தினர், போலீசார், முன்னாள் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள், முன்னாள் தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் ஆகியோர் சட்டமன்றத் தேர்தல் 2021 தேர்தல் பணி மேற்கொள்ள அன்புடன் அழைக்கிறோம் என்று மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. அதாவது ஏப்ரல் 4 ம் தேதி முதல் ஏப்ரல் 7ம் தேதி வரை தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் இதர படிகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.