மயிலாடுதுறை மாவட்ட முன்னோடி வங்கி பயனாளிகளுக்கு ரூ.40 கோடி கடனுதவி

மயிலாடுதுறை மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 500 பயனாளிகளுக்கு ரூ.40 கோடி கடனுதவி திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

Update: 2021-10-22 05:32 GMT

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் சிறப்பு வாடிக்கையாளர் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் சார்பில் தொழில், வீடு, கல்வி கடன்கள், தாட்கோ, சுயஉதவிக்கடன்கள் உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ருபாய் 40கோடி மதிப்பிலான கடனுதவியை 500 பயனாளிகளுக்கு வழங்கும் திட்டத்தை ஆட்சியர் லலிதா வழங்கி தொடங்கி வைத்தார். பொதுத்துறை வங்கிகள் மூலம் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் திட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டம் முதன்மையாக விளங்குவதாக கூறினார்.

சிறப்பாக செயல்பட்ட வங்கி மேலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நற்சான்றிதழ் வழங்கினார். முன்னதாக கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளர் சுரேஷ், பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News