பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மயிலாடுதுறையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து மயிலாடுதுறையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தொழிற்சங்கமான சோசியல் டெமாக்ரடிக் யூனியன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொழிற் சங்கத்தின் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினர்.