மயிலாடுதுறையில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வு கண்டித்து காங்கிரசார் பேரணி

மயிலாடுதுறையில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினர்.;

Update: 2021-12-01 15:23 GMT

மயிலாடுதுறையில் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் பேரணி நடத்தினர்.

மயிலாடுதுறை கூறைநாடு காந்தி சிலையிலிருந்து. முக்கிய வீதிகள் வழியாக, விஜயா தியேட்டர் வரை காந்தி குல்லா அணிந்து, காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசின் பெட்ரோல், கேஸ் விலை உயர்வை கண்டித்து, பாதயாத்திரை மேற்கொண்டனர்.

இந்த பேரணிக்கு காங்கிரஸ் மாவட்ட தலைவரும், மயிலாடுதுறை சட்ட மன்ற உறுப்பிருமான ராஜ்குமார் தலைமை வகித்தார் . பேரணியில், பெட்ரோல்., கேஸ் விலை உயர்வு, வேளாண்மை சட்டத்தை எதிர்த்து உயிர்நீத்த 'விவசாயிகளுக்கு நிவாரணம் கேட்டும், மத்திய மோடி அரசை கண்டித்தும் முழுக்கமிட்டனர். பேரணியில் 100க்கு மேற்பட்ட பெண்கள் உட்பட காங்கிரஸ் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News