குத்தாலம் ஒன்றியத்தில் 5 ஊராட்சிகளில் மக்கள் குறை தீர்வு முகாம்

குத்தாலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 5 ஊராட்சிகளில் மக்கள் குறை தீர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2021-12-21 12:38 GMT

குறைதீர்க்கும் முகாமில் நிவேதா எம். முருகன் எம்.எல்.ஏ. பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோனேரிராஜபுரம், சிவனாகரம், கொடிமங்கலம் பாலையூர், பருத்திக்குடி உள்ளிட்ட ஐந்து ஊராட்சிகளில் மக்கள் குறைதீர் முகாம் குத்தாலம் ஒன்றிய பெருந்தலைவர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது .இந்த நிகழ்வில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு பொதுமக்களை சந்தித்து பேசினார்‌.

மேலும் 5 ஊராட்சி மக்களிடம் குறைகளை கேட்டறிந்து 2,000-க்கும் மேற்பட்ட மனுக்களைபெற்றுக்கொண்டார். இது குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளார். முகாமில் பட்டா மாற்றம் மற்றும் திருத்துதல், சாலைகள், படித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு போன்ற மனுக்களை அதிகம் பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஞானவேலன், பொருளாளர் ஜி.என்.ரவி, குத்தாலம் ஒன்றிய செயலாளர்கள் மங்கை.சங்கர், முருகப்பா, குத்தாலம் தாசில்தார் பிரான்சுவா, சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் சாந்தி, வட்ட வழங்கல் அலுவலர் காந்திமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் கோபி, வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் அமிர்தகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மற்றும் கிராம வளர்ச்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News