மயிலாடுதுறையில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியவர்களுக்கு அபராதம்

மயிலாடுதுறையில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

Update: 2022-01-09 09:29 GMT

மயிலாடுதுறையில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் முழு ஊரடங்கால் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய நான்கு தாலுக்கா பகுதிகளில் ஊரடங்கை செயல்படுத்த 6 நிரந்தர சோதனை சாவடிகள், 40 தற்காலிக சோதனைசாவடிகள், அமைத்து 300க்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை நகரில் பேருந்துநிலையம், கூறைநாடு சித்தர்காடு, உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவை மீறி இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களை எச்சரிக்கை விடுத்து திருப்பி அனுப்பி வருகின்றனர். மேலும் ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றி திரிந்த நபர்கள் மீது போலீசார் இ-செலான் மூலம், 500 ரூபாய் அபராதமும், நேரிடையாக 200 ரூபாய் அபராதமும் விதித்து வருகின்றனர். தற்போது வரை மயிலாடுதுறை நகரில் 62 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News