மயிலாடுதுறை சித்தர்காட்டில் பால் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை அருகே சித்தர்காட்டில் பால் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடந்தது.;

Update: 2022-03-16 05:56 GMT

சித்தர்காடு பால் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது.

மயிலாடுதுறை அருகே சித்தர்காட்டில் பழைமையான பால் முத்துமாரியம்மன் கோயில் சிதிலமடைந்திருந்தது. இக்கோயில் நகராட்சி 29-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ரஜினி  முயற்சியால் புதிதாக கட்டப்பட்டு அதன் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி இன்று நடைபெற்ற இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவில், மஹா பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு கடம் புறப்பாடு செய்யப்பட்டது.

தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கடங்களை சுமந்து கோயிலை சுற்றி வந்து விமானத்தை அடைந்து அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத, மேளதாளங்கள் முழங்க விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

Tags:    

Similar News