பட்டணப் பிரவேச நிகழ்வு எந்த அரசியலும் நுழையாது: தருமபுரம் ஆதீனம்

பட்டணப் பிரவேச நிகழ்வு ஒரு ஆன்மிக விழாவில் எந்த அரசியலும் நுழையாத அளவில் தருமபுரம் ஆதீனம் பாதையை வகுத்துள்ளது

Update: 2022-05-22 07:15 GMT

தருமபுரம் ஆதீனம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 500 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீன மடம் உள்ளது. இந்த ஆதீனம் தொடங்கிய காலம் முதல் பட்டணப் பிரவேசம் நிகழ்வு நடந்தேறி வருகிறது. இன்னிலையில் பட்டணப் பிரவேசம் நிகழ்வுக்கு மனிதனை மனிதன் சுமப்பதால் என்று கேள்வி எழுப்பி திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடந்த ஆண்டு முதல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதேசமயம் பட்டணப் பிரவேசம் நிகழ்வில் திரளாக கலந்து கொள்வதாக பாஜகவினர் அறிவித்துள்ளனர்.

இதன் காரணமாக நூற்றாண்டுகளாக நடைபெறும் பட்டனப்ரவேஷம் இந்த முறை அனைவரது கவனத்தையும் ஈர்த்து முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. நிகழாண்டு பட்டணப் பிரவேசம் இன்று நடைபெற உள்ளது. இன்னிலையில் தருமபுரம் ஆதீனம் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பட்டணப் பிரவேச நிகழ்வு ஒரு ஆன்மிக விழா. இதில் எந்த அரசியலும் நுழையாத அளவிற்கு தருமபுரம் ஆதீனம் தனது பாதையை அமைத்துள்ளது இதில் அனைத்து சிவனடியார்களும் கலந்து கொள்ள வேண்டும். அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். நேற்று இரவு தருமபுரம் ஆதீனம் 27வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வெளியிட்டுள்ள இந்த வீடியோ முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Tags:    

Similar News