மயிலாடுதுறை மாவட்டத்துக்கு நாளை வரும் ஆளுநருக்கு கட்சிகள்-அமைப்பினர் எதிர்ப்பு
மயிலாடுதுறை மாவட்டத்துக்கு நாளை வருகைதரும் தமிழகஆளுநருக்கு கட்சிகள் அமைப்பினர் எதிர்ப்பை சமாளிக்க போலீஸார் ஆலோ;
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு (செவ்வாய்க்கிழமை) வருகைதரும் தமிழக ஆளுநருக்கு பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து 2 டிஐஜிக்கள் தலைமையில் காவல்துறை உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் நாளை காலை 9 மணி அளவில் கும்பாபிஷேக மண்டலாபிஷேக விழாவில் கலந்து கொண்டு கோவிலில் தரிசனம் மேற்கொள்கிறார் .
தொடர்ந்து 10மணி அளவில் தருமபுர ஆதீன திருமடத்தில். பவள விழா ஆண்டு நினைவுகலையரங்க கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு அருங்காட்சியகத்தை திறந்து வைத்து தருமை ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமகளிடம் ஆசீ பெற்று தருமபுர . குருமகாசன்னிதானம் தெலங்கானா செல்லும் ஞான ரதயாத்திரையை தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகாசன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெறுகிறார். நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக சட்டபேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கும், மசோதாக்களுக்கும் ஒப்புதல் தரமால் புறக்கனிப்பதை கண்டித்து ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டி கொடும்பாவி எரிக்கும் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்.கட்சி உட்பட பல்வேறு அமைப்பினர் ஈடுபடுவோம் என்று அறிவித்துள்ளனர்.
இதனால் ஆளுநர் வருகையை முன்னிட்டு டிஐஜிக்கள் கயல்விழி, சரவணன் தலைமையில் காவல்துறை உயரதிகாரிகள் ஆளுநருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மயிலாடுதுறை மன்னம்பந்தல் தனியார் கல்லூரியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆளுநர் வருகையையொட்டி 6 எஸ்.பி உள்ளிட்ட 1850 போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.