சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ஊராட்சி மன்ற தலைவர்கள் முற்றுகை
சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.;
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பினர் மற்றும் கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் கையில் மண்சட்டி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், ஊராட்சி நிர்வாகத்தில் தலையிடும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை கண்டித்தும், நூறு நாள் வேலைத்திட்டத்தை ஊராட்சியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கு வழங்க வலியுறுத்தியும், ஊராட்சி மன்ற தலைவர்களால் பணியமர்த்தப்பட்ட பணித்தள பொறுப்பாளர்களை நீக்கும் அதிகாரிகளின் தன்னிச்சையான முடிவை கண்டித்தும், ஊராட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டிய சரியான நிதியை சில ஊராட்சிகளுக்கு திட்டமிட்டு வழங்கப்படாமல் தடுக்கப்பட்டு வருவதாகவும் கண்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன.