ஊராட்சி ஓ.எச்.டி ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள் மனு அளிக்கும் போராட்டம்
ஓ.எச்.டி ஆப்ரேட்டர் அனைவருக்கும் சமஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
மயிலாடுதுறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஓ.எச்.டி ஆபரேட்டர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஊராட்சியில் பணிபுரியும் ஓ.எச்.டி ஆப்ரேட்டர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தொழிலாளர்கள் மற்றும் சிஐடியு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதில், ஓ.எச்.டி ஆப்ரேட்டர், தூய்மை பணியாளர், தூய்மை காவலர் அனைவருக்கும் கொரோனா நிவாரண தொகை வழங்கிட வேண்டும், ஓ.எச்.டி ஆப்ரேட்டர்கள் அனைவருக்கும் சம ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 7-வது ஊதியக்குழு அரியர் தொகை, சிறப்பு படி ரூ.200, தொட்டி சுத்தம் செய்யும் ஊதியம் ஆகியவற்றை வழங்கிட வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு பணிக்கொடை ரூ. 50,000, மாத ஓய்வூதியம் ரூ.2000 வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கை அடங்கிய மனுவை, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் உமாவிடம் 500க்கும் மேற்பட்டோர் வழங்கினர்.