அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மழையால் நெல் மூட்டைகள் சேதம்

மயிலாடுதுறையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.

Update: 2022-04-11 05:45 GMT

மயிலாடுதுறையில் மழையால் சேதமடைந்துள்ள நெல் மூட்டைகள். 

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா சாகுபடி அறுவடைக்காக மாவட்டம் முழுவதும் 165 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இந்த நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து 2லட்சத்தி 10ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டன. சம்பா சாகுபடி அறுவடைகள் முடிந்த நிலையில் தற்போது விவசாயிகள் உளுந்து பயிறு அறுவடையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில்,  மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா அறுவடைகள் முடிவடைந்து. விவசாயிகள் நெல் அனைத்தும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விறப்பனை செய்துவிட்டனர். கடந்த மாதம் 16 ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான அரசு நேரடி கொள்முதல் நிலையம் மூடப்பட்டுள்ளது. ஆனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும்பாலான கொள்முதல் நிலையங்களில் மூட்டைகள் கிடங்குக்கு கொண்டு செல்லாததால் திறந்த வெளியிலேயே சுமார் 64000 டன் தேங்கிக் கிடக்கிறது.

மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி, மணக்குடி, தில்லையாடி, வில்லியநல்லூர், வழுவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. இந்த முட்டைகள் தற்போது 2 நாட்களாக பெய்து வரும் மழையினால் பாதித்து சேதமடைந்து வருகிறது. இதனால் அரசுக்கு நஷ்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது எனவே தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை கிடங்குக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News