மயிலாடுதுறையில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் திறப்பு
மயிலாடுதுறையில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் திறந்து வைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கோட்ட பொறியாளர் அலுவலகம் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு இந்த அலுவலகத்தை திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் திருச்சி மண்டல கண்காணிப்பு பொறியாளர் முனைவர் ஆர் கிருஷ்ணசாமி மற்றும் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலர்கள் தி.மு.க. பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.