என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

ஓய்வுபெற்று சென்றுள்ளவர்கள் என 125 நபர்களுக்கு 2019லிருந்து 28 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை;

Update: 2021-11-07 11:15 GMT

14வது நாளாக என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடர்கின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தலைஞாயிறு என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை 2017ஆம் ஆண்டு பூட்டப்பட்டதுடன், மராமத்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் ஓய்வுபெற்று சென்றுள்ளவர்கள் என 125 நபர்களுக்கு 2019லிருந்து 28 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. சம்பள நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி ஆலையினுள் 14வது நாளாக காத்திருப்பு போராட்டத்தை நடத்திவருகின்றனர். ஆலைத்தொழிலாளி கடந்த மாதம் 25ஆம் தேதியிலிருந்து துவங்கிய காத்திருப்புப் போராட்டம் 14நாட்களாகிறது. என்றும் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகள் போராட்டத்தை கைவிடவேண்டும் என்று கேட்டார்கள், சம்பளம் பெற்றுத்தர எந்த உத்தரவாதமும் வழங்கவில்லை, சம்பளம் கிடைக்கும்வரை எங்களது போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News