மயிலாடுதுறை அருகே கோனேரிராஜபுரத்தில் புதிய மின்மாற்றி திறப்பு
மயிலாடுதுறை அருகே கோனேரிராஜபுரத்தில் புதிய மின்மாற்றியை சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன் திறந்து வைத்தார்.;
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி, குத்தாலம் ஒன்றியம் கோனேரிராஜபுரம் ஊராட்சி பொய்கை வளர் நத்தம் பகுதியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அதம்பார் பிரிவு குறைமின்னழுத்த மின்சாரத்தை சரி செய்து ரூ.5 லட்சத்தை 12 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய 25 கிலோவோல்ட் ஆம்பியர் மின்மாற்றியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மின்மாற்றியை பொய்கை வளர்நத்தம் பகுதியில் 40 வீடுகளின் மக்கள் பயன்பாட்டிற்காக பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் ரிப்பன் கத்தரித்து திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஞானவேலன், மாவட்ட தி.மு.க. பொருளாளர் ஜி.என்.ரவி, ஒன்றிய செயலாளர்கள் மங்கை சங்கர், முருகப்பா, குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா விஜயகுமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் ஸ்ரீதர், நாகப்பட்டினம் மேற்பார்வை பொறியாளர் சதீஷ்குமார், உதவி செயற்பொறியாளர் ஜி.பிரபாகர், உதவி பொறியாளர் நிரஞ்சனா தேவி, மின் வாரிய பணியாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.