மயிலாடுதுறை மாவட்டத்திற்கான புதிய நகர் ஊரமைப்பு அலுவலகம் திறப்பு
மயிலாடுதுறை மாவட்டத்திற்கான புதிய நகர் ஊரமைப்பு அலுவலகம் திறந்து வைக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டு ஒருவருடம் ஆகின்ற நிலையில் மாயூரநாதர் தெற்கு வீதியில் தற்காலிக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இயங்கி வருகிறது. இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் ஒவ்வொரு துறைகளும் உருவாக்கப்பட்டு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அதனடிப்படையில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறையின் கீழ் மாவட்ட நகர்ஊரமைப்பு அலுவலகம் மயிலாடுதுறை காமராஜர் சாலையில் தொடங்கப்பட்டுள்ளது. புதிய அலுவலகத்தை துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் வீடு மற்றும் மனைகள் டி.டி.சி.பி. அனுமதி உள்ளிட்ட அனைத்திற்கும் நாகை, தஞ்சாவூருக்கு அலைவதை தவிர்க்கும் வகையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கான நகர்ஊரமைப்பு அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும் என்றார்.