சீர்காழியில் தனியார் பேருந்து மோதி புது மாப்பிள்ளை உயிரிழப்பு

சீர்காழியில் தனியார் பேருந்து மோதி புது மாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update: 2022-05-18 13:10 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவந்திகட்டளை தெருவை சேர்ந்தவர் மணி மகன் செந்தில்குமார்(38).மரம் வெட்டும் தொழிலாளி.இவருக்கு திருமணமாகி 50நாட்கள் ஆகிறது.செந்தில்குமார் இருசக்கரவாகனத்தில் சீர்காழியிலிருந்து சட்டநாதபுரம் நோக்கி சென்றுள்ளார்.உப்பனாற்று பாலத்தில் சென்றபோது சீர்காழியிலிருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற தனியார் பேருந்தை கடந்து செல்லமுயன்றபோது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு செந்தில்குமார் தலை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.வழக்குபதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News